/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிபன் கடையில் பணம் பறித்த ரவுடி கைது
/
டிபன் கடையில் பணம் பறித்த ரவுடி கைது
ADDED : மே 17, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்:அயனாவரம், திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 57. வி.பி., கோவில் இரண்டாவது தெருவில் இவர் நடத்தும் டிபன் கடைக்கு, நேற்று முன்தினம் வந்த நபர், சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சென்றார்.
ஆறுமுகம் அவரை தடுத்து பணம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி, கல்லாபெட்டியில் இருந்த 1,000 ரூபாயை பறித்து தப்பினார்.
அயனாவரம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்படி, மூர்த்தி நகரைச் சேர்ந்த ரவுடி ஹரிகுமார், 28, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.