/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிபன் கடையில் மிரட்டிய ரவுடி கைது
/
டிபன் கடையில் மிரட்டிய ரவுடி கைது
ADDED : ஜன 23, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமரன் நகர்,அசோக் நகர், நல்லாங்குப்பத்தை சேர்ந்தவர் பவுசர் அலி, 51. இவர் கோவிந்தன் சாலையில், டிபன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 20 ம் தேதி இரவு, டிபன் கடைக்கு வந்த விஜய், 28, என்ற ரவுடி, உணவு பார்சலை வாங்கினார்.
அதற்குரிய பணத்தை கேட்ட போது, செலுத்த மறுத்ததோடு, கீழே கடந்த கட்டையை எடுத்து டிபன் கடையை சேதப்படுத்தியுள்ளார்.
பின், கல்லாவில் இருந்த 500 ரூபாயும் எடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்த புகாரை விசாரித்த குமரன் நகர் போலீசார், விஜயை கைது செய்தனர். அவர் மீது, ஏற்கனவே, குமரன்நகர் போலீஸ் நிலையத்தில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

