/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி
/
பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி
ADDED : செப் 03, 2025 12:22 AM

புளியந்தோப்பு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கு செல்ல இருந்த ரவுடி, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 'கொருக்குப்பேட்டை' மாரி, 36. போதை தடுப்பு வழக்கு ஒன்றில், தனிப்படை போலீசார், மாரியை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறைக்கு அனுப்ப போலீசார் தயாராகினர்.
புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இருந்த மாரி, திடீரென பிளேடால் கழுத்தை இரண்டு பக்கத்திலும் அறுத்துக் கொண்டார். போலீசார், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கழுத்தில் நான்கு தையல்கள் போடப்பட்ட நிலையில், மாரி சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது 30க்கும் மேற்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.