தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ‘சிடி’ மணி சுற்றிவளைப்பு

30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ‘சிடி’ மணி சுற்றிவளைப்பு

30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ‘சிடி’ மணி சுற்றிவளைப்பு


UPDATED : அக் 28, 2026 12:38 AM

ADDED : அக் 28, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:38 AM ADDED : அக் 28, 2026 12:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி ‘சிடி’ மணி, 52, செங்கல்பட்டு அருகே நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ‘சிடி’ மணி என்ற மணிகண்டன், 52. இவர் மீது கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவர் துப்பாக்கி முனையில் தொழில் வர்த்தகர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வருவதாக, சென்னை தெற்கு மாவட்ட இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து ‘சிடி’ மணியை தீவிரமாக தேடிவந்தனர். அவர் சேலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்றதை அறிந்த ‘சிடி’ மணி, இ.சி.ஆரில் உள்ள வீட்டிற்கு, நேற்று சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அருகே, எஸ்.ஐ., ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின், அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேனாம்பேட்டை எஸ்.ஐ., தன் மீது, பொய் வழக்கு பதிந்து கைது செய்ததாக, ‘சிடி’ மணி, சமூக வலைதளத்தில் ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us