/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதைப் பொருள் வழக்கில் ரவுடி காது குத்து ரவி கைது
/
போதைப் பொருள் வழக்கில் ரவுடி காது குத்து ரவி கைது
ADDED : ஆக 02, 2025 12:16 AM

நீலாங்கரை,போதைப் பொருள் வழக்கில் பிரபல ரவுடி காதுகுத்து ரவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரபல ரவுடி காதுகுத்து ரவி. இவர் மீது, ஆறு கொலை வழக்குகள் உட்பட, 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஐந்து முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் சங்கர்ராமன் கொலை வழக்கில், மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட அப்புவின் ஆதரவாளர் கதிரவனை கொலை வழக்கில் தொடர்புடையவர்.
வடசென்னையில் நில மோசடி, கட்ட பஞ்சாயத்து, ஆள்கடத்தல், போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வழக்கும் இவர் மீது உள்ளது.
இப்படி சம்பாதித்த பல கோடி ரூபாயை பல ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத்துறை முடக்கியது. போலீசார் தொடர் வேட்டை காரணமாக, ஆந்திர மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தார்.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருள் பரிமாமாற்றம் செய்த, காதுகுத்து ரவியை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10 கிராம் மெத் ஆம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.