/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செருப்பு தைக்கும் தொழிலில் போட்டி தம்பியை கொன்றவருக்கு 'ஆயுள்'
/
செருப்பு தைக்கும் தொழிலில் போட்டி தம்பியை கொன்றவருக்கு 'ஆயுள்'
செருப்பு தைக்கும் தொழிலில் போட்டி தம்பியை கொன்றவருக்கு 'ஆயுள்'
செருப்பு தைக்கும் தொழிலில் போட்டி தம்பியை கொன்றவருக்கு 'ஆயுள்'
ADDED : ஆக 02, 2025 12:16 AM
சென்னை,செருப்பு தொழில் போட்டியில், தம்பியை குத்தி கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டனை சேர்ந்தவர் இருதயம், 30. இவர், அண்ணாநகர் கந்தசாமி கல்லுாரி அருகே உள்ள பிளாட்பாரத்தில், செருப்பு தைக்கும் கடை வைத்திருந்தார்.
இருதயம் கடைக்கு எதிரே, அவரது தம்பி லுார்துசாமியும் கடை வைத்திருந்தார். தொழில் செய்வதில், அண்ணன், தம்பி இடையே முன் விரோதம் ஏற்பட்டது.
கடந்த 2021 மார்ச் 30ல், கடையில் இருந்து தன் பொருட்களை எடுப்பது தொடர்பாக, அண்ணனிடம் லுார்துசாமி கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த இருதயம், தன் தம்பி லுார்துசாமியின் கழுத்தில் சிறு கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த லுார்துசாமி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, இருதயத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மாவட்ட, 20வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.தோத்திரமேரி முன் நடந்தது.
போலீசார் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ஆர்.கே.முத்துராமன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இருதயம் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.