/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டர் சட்டத்தில் ரவுடிக்கு சிறை
/
குண்டர் சட்டத்தில் ரவுடிக்கு சிறை
ADDED : ஜூன் 20, 2025 12:33 AM
சென்னை, முகலிவாக்கம், குமுதம் நகரைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி, 41, இவருக்கு, கணபதிலால் என்பவர் தர வேண்டிய, 87.82 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தராமல், ஏமாற்றி வந்ததுள்ளார்.
அந்த பணத்தை பெற்று தருவதாக கூறி, ரவுடியான வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன், 51, முன் பணமாக ஒரு லட்ச ரூபாயை, தீபன் சக்கரவர்த்தியிடம் பெற்றுள்ளார். மேலும், 12 லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து, தீபன் சக்கரவர்த்தி, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, மிளகாய் பொடி வெங்கடேசன், கணபதிலால், கோகுல்வாசன் ஆகிய மூன்று பேரையும், 13ம் தேதி கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கைதான மிளகாய் பொடி வெங்கடேசன், செங்குன்றம் காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது, ஆவடி ஆணையரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், ஐந்து வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில், 49 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தொடர்ந்து மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கைதான மிளகாய் பொடி வெங்கடேசன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.