/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி 'பாம்' சரவணன் கைது
/
ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி 'பாம்' சரவணன் கைது
ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி 'பாம்' சரவணன் கைது
ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி 'பாம்' சரவணன் கைது
ADDED : ஏப் 30, 2025 12:28 AM
சென்னை, புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் ரவடி 'பாம்' சரவணன், 41. இவர் மீது, ஆறு கொலைகள் உட்பட 26க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்தாண்டு ஜூலையில் கொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டு வந்தார்.
கடந்த 2018ல், ரவுடி நாகேந்திரன் கூட்டாளிகளை கொலை செய்த வழக்கில் தலைமறைவான பாம் சரவணன், ஆந்திராவில் பதுங்கி இருந்தபோது, தனிப்படை போலீசார், காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது, கொடுங்கையூரைச் சேர்ந்த நடராஜன், 51, என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, 5,000 ரூபாய் வழிப்பறி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கில், கொடுங்கையூர் போலீசார் நேற்று, பாம் சரவணனை கைது செய்தனர். அவரது கூட்டாளி ராஜேஷ், 37, என்பவரை தேடி வருகின்றனர்.

