/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அட்டூழியம் செய்த ரவுடி கோர்ட்டில் சரண்
/
அட்டூழியம் செய்த ரவுடி கோர்ட்டில் சரண்
ADDED : செப் 20, 2025 01:14 AM
சென்னை, பாடி, கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன், 33. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்மதி, 29, எட்டு மாத கர்ப்பிணி.
கடந்த 15ம் தேதி இரவு, கடைக்கு அருகே வந்த கஞ்சா கும்பல், மாமூல் கேட்டு வேல்முருகனை தாக்கியது. தடுக்க வந்த தமிழ்மதியின் வயிற்றில், கஞ்சா கும்பல் கத்தியால் குத்த முயன்றது.
பின், கடையிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிய கும்பல், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், ரவுண்ட் பில்டிங் பகுதியைச் சேர்ந்த ரவுடியான மணிரத்தினம், 27, என்பவரை தாக்கி, அவரது வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசியது.
இது குறித்து வழக்கு பதிந்த ஜெ.ஜெ.நகர் போலீசார், கஞ்சா போதையில் ஈடுபட்ட ரவுடி விக்னேஷ், 24, தனுஷ், 22, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடியான, 'சுனாமி' சூர்யா, அம்பத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
இந்த வழக்கில், ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் வழுக்கி விழுந்து, கை, கால்களில் முறிவு ஏற்பட்டது.