/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்துவட்டி கேட்டு மிரட்டிய ரவுடியின் தங்கை கைது
/
கந்துவட்டி கேட்டு மிரட்டிய ரவுடியின் தங்கை கைது
ADDED : ஜன 25, 2025 12:38 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கற்பகம், 47. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்தின் தங்கை. இவரிடம், வியாசர்பாடியை சேர்ந்த முருகன், 41, வட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கி இருந்தார்.
அசலும், வட்டியுமாக, 1.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், 3 லட்சம் ரூபாய் தர வேண்டுமென, கற்பகம் மிரட்டி வந்துள்ளார். முருகன் வீட்டுக்கு சென்ற கற்பகம், அவரது கணவர் சதீஷ் ஆகியோர், அங்கிருந்த முருகன் மகளை அடித்தும், கத்திமுனையில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, கற்பகம், 47, அவரது கணவர் சதீஷ், 48 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.