/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய பாய் மர படகு போட்டியில் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் வெற்றி
/
தேசிய பாய் மர படகு போட்டியில் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் வெற்றி
தேசிய பாய் மர படகு போட்டியில் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் வெற்றி
தேசிய பாய் மர படகு போட்டியில் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் வெற்றி
ADDED : மே 17, 2025 12:20 AM
சென்னை :'யூனிபை கேப்பிடல்' அமைப்பு சார்பில், நான்காம் ஆண்டாக, தேசிய அளவிலான, 'ஆப்சோர் ரெகாடா' வகை பாய்மர படகு போட்டிகள், சென்னையில், இம்மாதம் 12ம் தேதி துவங்கியது. ஐந்து நாட்கள் நடந்த போட்டிகள் நேற்று முடிவடைந்தன.
சென்னை முதல் மகாபலிபுரம் வரை 50 கி.மீ., துாரம், எண்ணுார் காமராஜ் துறைமுகம் வரை 20 கி.மீ., என இரண்டு பிரிவுகளில் நடந்த போட்டிகளில், ஒன்பது அணிகள் பங்கேற்றன.
முதல் பிரிவான, 'கோல்டன் ப்ளீட்' போட்டியில், ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பை சேர்ந்த அபிமன்யு பன்வர், சின்ன ரெட்டி உட்பட ஐந்து அணிகள் பங்கேற்றன.
இதில், ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பை சேர்ந்த அபிமன்யு பன்வர் அணி முதலிடத்தையும், சின்ன ரெட்டி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
இரண்டாவது பிரிவான, 'சில்வர் ப்ளீட்' போட்டியில், ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பை சேர்ந்த வின்சென்ட் - இ , சுவப்னில் சுவாமி உட்பட நான்கு அணிகள் மோதின.
மெட்ராஸ் யாட்ச் கிளப்பை சேர்ந்த வின்சென்ட் - இ அணி முதலிடத்தையும், சுவப்னில் சுவாமி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
**