/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை
/
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை
ADDED : ஜூலை 19, 2025 12:24 AM
சென்னை, நுங்கம்பாக்கத்தில், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியின் வீட்டில், ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நுங்கம்பாக்கம், வேல்ஸ் கார்டன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், ரயில்வேயில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 2023ல், வேளச்சேரியில் உள்ள அவரது நிலத்தை விற்றதன் வாயிலாக கிடைத்த பணம், ஓய்வு பெற்ற பணத்தை மகளின் படுக்கை அறையில் உள்ள பெட்டியில் வைத்து இருந்தார். மேலும், முதல் தளத்தில் வசித்து வரும் நண்பர் செல்வத்துரை கொடுத்த, 50 லட்சம் ரூபாயையும் அதே பெட்டியில் வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி மகளின் அறையில் வைத்திருந்த பணப் பெட்டி உடைந்து கிடந்துள்ளது. பெட்டியில் இருந்த ஒரு கோடி ரூபாய் மற்றும் 2 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து நேற்று வெங்கடாசலம் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வரவில்லை என்றும் பணியாட்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், வீட்டு பணியாட்கள் மற்றும் கார் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.