தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.1 கோடி போதை மூலப்பொருள் பறிமுதல்: தந்தை, மகன் உட்பட மூவர் கைது

ரூ.1 கோடி போதை மூலப்பொருள் பறிமுதல்: தந்தை, மகன் உட்பட மூவர் கைது

ரூ.1 கோடி போதை மூலப்பொருள் பறிமுதல்: தந்தை, மகன் உட்பட மூவர் கைது


UPDATED : நவ 13, 2026 09:28 PM

ADDED : நவ 13, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 09:28 PM ADDED : நவ 13, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருளை பதுக்கிய தந்தை, மகன் உட்பட மூவரை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை, எம்.கே.பி.நகர், அன்னை இந்திரா நகரில், ‘ஏ.என்.என்டர்பிரைசஸ்’ என்ற பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, என்.சி.பி., எனும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல அதிகாரி அரவிந்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். அப்போது, மெத் ஆம்பெட்டமைன் தயாரிக்க பயன்படும் ஒரு கோடி மதிப்புள்ள, ‘சூடோஎபிட்ரின்’ மூலப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சேவியர், 55, அவரது மகன் அஜய், 25, ரவி, 50 ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து விசாரித்தனர். இதில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து மூலப்பொருளை வாங்கி வந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. அங்குள்ள கூட்டாளிகள் வாயிலாக மெத் ஆம்பெட்டமைன் தயாரித்து, அதிக விலைக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதன் பின்னணியில் செயல்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து, என்.சி.பி., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us