/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு ரயில்வே ஊழியரிடம் ரூ.1 லட்சம் 'ஆட்டை'
/
ஓய்வு ரயில்வே ஊழியரிடம் ரூ.1 லட்சம் 'ஆட்டை'
ADDED : மார் 01, 2024 12:28 AM
புழல், சென்னை, புழல் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குமார், 62; ஓய்வு பெற்ற, ரயில்வே ஊழியர்.
சமீபத்தில் இவரது மொபைல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை இந்தியன் வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்தி உள்ளார்.
அப்போது, குமாரின் வங்கி கணக்கு சேவை பயன்பாட்டிற்காக, சுய விபரங்களை புதுப்பிக்க வேண்டுமெனக் கூறி, விபரங்களை கேட்டு உள்ளார்.
இதை நம்பி குமாரும், தன் மொபைல்போனுக்கு வந்த ரகசிய 'ஓ.டி.பி.,' எண்ணை கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில், அவரது வங்கிக் கணக்கு சேமிப்பில் இருந்து, 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
பணம் திருடப்பட்டதை அறிந்த அவர், இணைய வழி சைபர் கிரைம் புகார் எண் 1930 மற்றும் புழல் போலீசிலும் புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

