/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் சிக்கியது
/
ரூ.10 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் சிக்கியது
ADDED : அக் 25, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய உயர்ரக கஞ்சா சிக்கியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்த வடமாநில பயணி ஒருவரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, 10 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு 10 கோடி ரூபாய்.
கமிஷன் பணத்திற்காக, தாய்லாந்திற்கு சென்று கஞ்சா கடத்தி வந்ததாக, வடமாநில பயணி வாக்குமூலம் அளித்துள்ளார். விமான நிலையத்தின் வெளியே கஞ்சா பண்டல்களை பெற காத்திருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அவர் குறித்தும், அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

