ADDED : டிச 12, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானைகவுனி, சென்ட்ரல் அடுத்த வால்டாக்ஸ் சாலையில், நேற்றிரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த யானைகவுனி போலீசார், பைக்கில் வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டதில், 10 லட்ச ரூபாய் இருந்தது.
விசாரணையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த சர்வன்ராம், 30, என்பதும், எலக்ட்ரிக்கல் கடை வைக்க, தி.நகரில் உள்ள நண்பரிடம், கடன் வாங்கி வருவதாக கூறியுள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

