ADDED : நவ 07, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,
போரூர், கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி, 2023ல், ஆவடி மத்திய குற்றப் பிரிவில் அளித்த புகார்:
கொளப்பாக்கம் வார்டு உறுப்பினர் துரை சேபாலா, மேகநாதனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவர்கள் கூறியபடி, கொளப்பாக்கத்தில் உள்ள, 2,972 சதுர அடி நிலத்தை, உரிமையாளர் என கூறிய ஹேமா சேஷன், 1.10 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு பொது அதிகாரப் பத்திரம் எழுதிக்கொடுத்தார்.
ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றியது தெரிந்தது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து தொடர்புள்ள பெரம்பூரைச் சேர்ந்த ஜெயகுமார், 52, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.