/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட ரூ.17 கோடி சமுதாய நலக்கூடம் பணி
/
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட ரூ.17 கோடி சமுதாய நலக்கூடம் பணி
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட ரூ.17 கோடி சமுதாய நலக்கூடம் பணி
பூமி பூஜையுடன் கிடப்பில் போடப்பட்ட ரூ.17 கோடி சமுதாய நலக்கூடம் பணி
ADDED : அக் 07, 2025 12:53 AM

திருவொற்றியூர், திருவொற்றியூரில், 17 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட சமுதாய நலக்கூட கட்டுமான பணி, பூமி பூஜையுடன் கடந்த ஏழு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் மண்டலம், 11வது வார்டு, எல்லையம்மன் கோவில் நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனை பின்புறம், திருவள்ளுவர் கலைக்கூட வளாகத்தில், சி.எம்.டி.ஏ.,வால், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இந்த சமுதாய கூடம், 30,427 சதுர அடி பரப்பில் தரைத்தளம் உட்பட மூன்று தளங்கள், நவீன சமையல் கூடம், மின்துாக்கி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைய உள்ளது என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு, கடந்த மார்ச் 6ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது.
ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு ஏழு மாதங்கள் கடந்தும், கட்டுமான பணிகள் துவங்குவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. தற்போது, செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது.
திருவொற்றியூரை பொறுத்தவரை, தனியார் திருமண மண்டபங்களின் ஒருநாள் வாடகை ஒரு லட்சம் ரூபாய் முதல் பல லட்சங்களாக உள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் பயன்படும் வகையில் உள்ள இந்த திட்டம், தனியார் திருமண மண்டப உரிமையாளர்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளதா உள்ளிட்ட, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
தனியார் இடமா? திருவள்ளுவர் கலைக்கூட வளாகத்தில், சமுதாய நலக்கூடம் கட்டும் பணிக்கு, பூமி பூஜை போடப்பட்டது. அந்த இடத்தை, பணி மேற்கொள்ளும் சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைத்தோம். இந்த நிலையில், தனிநபர் குடும்பத்தினர், இது தங்கள் சொத்து என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்கு, மாநகராட்சி தரப்பில், எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடங்கலை ரத்து செய்யும் படி, கலெக்டரிடம் கடிதம் வழங்கியிருக்கிறோம். - மாநகராட்சி அதிகாரி.