/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலையம் அருகே ரூ.1.80 லட்சம் கஞ்சா பறிமுதல்
/
ரயில் நிலையம் அருகே ரூ.1.80 லட்சம் கஞ்சா பறிமுதல்
ADDED : மே 09, 2025 01:20 AM

அம்பத்தூர், அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி, காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இரண்டு பையுடன், ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தம் அருகே, வெகுநேரமாக சுற்றிதிரிந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விக்ரம், 31 என்ற வாலிபரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தனர். அதில் 1.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 18 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரிந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.