/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
15 கட்டடங்கள் சீரமைக்க ரூ.1.85 கோடி ஒதுக்கீடு
/
15 கட்டடங்கள் சீரமைக்க ரூ.1.85 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 05, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு,அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இதில், 173, 175, 176, 181 ஆகிய வார்டுகளில், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு பண்டக சாலை உள்ளிட்ட, 15 கட்டடங்கள் உள்ளன.
இவை மிகவும் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகும் நிலையில் உள்ளன. இந்த 15 கட்டடங்களையும் சீரமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, 1.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், பருவமழைக்கு முன் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.