/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
9 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு கட்டமைப்புக்கு ரூ.250 கோடி
/
9 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு கட்டமைப்புக்கு ரூ.250 கோடி
9 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு கட்டமைப்புக்கு ரூ.250 கோடி
9 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு கட்டமைப்புக்கு ரூ.250 கோடி
ADDED : அக் 10, 2025 11:58 PM

சென்னை : மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரயில் தடத்தில், ஒன்பது ரயில் நிலையங்களில் நுழைவு வாயில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, 250 கோடி ரூபாய்க்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில், 117 கி.மீ., துாரத்திற்கு பணிகள் நடைபெறுகின்றன.
இதில், மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரயில் வழி தடம் 45.8 கி.மீ., துாரத்தில் அமைகிறது. இதில், மொத்தம் 47 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.
அந்த வகையில், இந்த தடத்தில் நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களில், 17 நுழைவுகள், வெளியேறும் கட்டமைப்பு வடிவமைத்து கட்ட, 'பிரிட்ஜ் ஆண்ட் ரூப் கம்பெனி லிமிடெட்' என்ற நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக் முன்னிலையில், திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் ஆண்ட் ரூப் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மொத்தம், 250.47 கோடி ரூபாயில் கட்டுமான பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பெரும்பாலான நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில், பயணியர் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்தி உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டிக்கெட் வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்.