/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : அக் 10, 2025 11:57 PM

சென்னை : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 6 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ராயப்பேட்டை, வி.எம்., தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்பாபு, 43. இவருக்கு, அறிமுகமான பள்ளிக்கரணையைச் சேர்ந்த உதயகுமார், 40, என்பவர், அரசு துறையில் உயர் பதவியில் உள்ள பலரை தெரியும் என்றும், பணம் கொடுத்தால் தேர்வு எழுதாமலேயே வேலை வாங்கி தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதை நம்பிய சதீஷ்பாபு, கடந்த 2020ல் பல தவணைகளாக 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் வேலை வாங்கி தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதீஷ்பாபு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், பள்ளிக்கரணையைச் சேர்ந்த உதயகுமார், 40 என்பவர், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.