ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்
ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்
ADDED : நவ 13, 2026 05:18 PM

செங்குன்றம்: உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
-செங்குன்றம், எம்.ஏ.நகர் சோதனை சாவடியில், செங்குன்றம் போலீசார் இன்று (நவ.,13), வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காலை 6:00 மணியளவில், தெலுங்கானாவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஒரு பையில் 50 லட்ச ரூபாய், கட்டு கட்டாக இருந்தது கண்டறியப்பட்டது.
காரில் இருந்த இருவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரில் வந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், இருவரும் தெலுங்கானாவைச் சேர்ந்த மகேஷ், 38, சையத் ரெட்டி, 40 என்பதும், இவர்கள் சவுகார்பேட்டையில் தங்க நகைகள் வாங்க, தெலுங்கானாவில் இருந்து காரில் வந்தது தெரியவந்தது. இவர்களிடம் பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இருவரிடமு் விசாரித்து வருகின்றனர்.
