/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.5.8 லட்சம் அபராதம்
/
விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.5.8 லட்சம் அபராதம்
ADDED : ஜன 08, 2025 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்:மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த மாதம் ஆர்.டி.ஓ., சுந்தரமூர்த்தி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், அதிக வேகம், அதிக பாரம், மொபைல் போனில் பேசியபடி வருவது, மது அருந்தி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமுறை மீறிய, 86 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
அந்த வாகனங்களிடம் இருந்து, 5.8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.