/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரிய குடியிருப்பு வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி
/
வாரிய குடியிருப்பு வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி
வாரிய குடியிருப்பு வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி
வாரிய குடியிருப்பு வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி
ADDED : ஜன 23, 2025 12:18 AM
எம்.கே.பி.நகர், சென்னை, வியாசர்பாடி, கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் அம்பத்ராஜ், 31. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, 2023ல், தலைமை செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் உதவியாளராக பணிபுரியும் சரவணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில் நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகவும், விரும்புவோர் இருந்தால் சொல்லுங்கள்' என்றும் அம்பத்ராஜிடம் சரவணன் கூறியுள்ளார்.
இதை நம்பிய அம்பத்ராஜ், 2023, மார்ச் 6ல், தனக்கு தெரிந்த சுதாகர், சதீஷ், ரேகா, புவனேஸ்வரி, அமுதா ஆகியோரிடம், 9.50 லட்சம் ரூபாய் வாங்கி, சரவணனிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்ற சரவணன், இரண்டு ஆண்டுகளாகியும், வீடு வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளார்.
பணத்தை திருப்பித் தருமாறு கொடுத்த பல கட்ட நெருக்கடிக்கு பின், 3 லட்ச ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து அம்பத்ராஜ், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, சரவணன் மீது போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

