/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புது 'கிரெடிட் கார்டு' வழங்குவதாக வாலிபரிடம் ரூ.67,963 'ஆட்டை'
/
புது 'கிரெடிட் கார்டு' வழங்குவதாக வாலிபரிடம் ரூ.67,963 'ஆட்டை'
புது 'கிரெடிட் கார்டு' வழங்குவதாக வாலிபரிடம் ரூ.67,963 'ஆட்டை'
புது 'கிரெடிட் கார்டு' வழங்குவதாக வாலிபரிடம் ரூ.67,963 'ஆட்டை'
ADDED : ஆக 11, 2025 01:25 AM
சென்னை:புது கிரெடிட் கார்டு வழங்குவதாக கூறி, வீடியோ அழைப்பில் ஆவணங்களை சரிபார்ப்பது போல, வாலிபரிடம் 67,963 ரூபாய் 'ஆட்டை' போட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், புதிய கிரெடிட் கார்டு வாங்குவதற்கான விளம்பரத்தை பார்த்து, அதில் பதில் அளித்துள்ளார்.
அதில், மொபைல் போன் எண்ணையும் பதிவு செய்துள்ளார். இந்த எண்ணிற்கு நேற்று முன்தினம் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, புதிய கிரெடிட் கார்டு வழங்க, வீடியோ அழைப்பு வாயிலாக ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே வைத்திருக்கும் கிரெடிட் கார்டு விபரத்தையும் கேட்டுள்ளார். அதை வீடியோ அழைப்பின்போது காண்பிக்குமாறு தெரிவித்து உள்ளார். அதன்படி செய்தபோது, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கும் 'லிங்க்' ஒன்றை அனுப்பி உள்ளார். அதை 'கிளிக்' செய்து விண்ணப்பிக்கும்போதே, ஓ.டி.பி., எண் வந்துள்ளது.
ஆகாஷ் அந்த எண்ணை தெரிவிக்கவில்லை. எனினும், மர்ம நபர் ஆகாஷ் மொபைல் போனை 'ேஹக்' செய்து, ஓ.டி.பி., எண்ணை வைத்து, 67,963 ரூபாய் 'ஆட்டை' போட்டுள்ளார். இந்த தொகைக்கு ஆன்லைன் வாயிலாக, மொபைல் போனை வாங்கி உள்ளார்.
இது குறித்து ஆகாஷ் செம்பியம் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பண மோசடி செய்த நபர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சைபர் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.