/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு இன்ஸ்., வீட்டில் ரூ.70,000 திருட்டு
/
ஓய்வு இன்ஸ்., வீட்டில் ரூ.70,000 திருட்டு
ADDED : ஆக 03, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில், 70,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது.
கொடுங்கையூர், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ஞானசேகர், 74. இவர், தமிழக காவல் துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, 2010ல் ஓய்வு பெற்றவர்.
கடந்த 2025 ஜூன் மாதம் முதல், மடிப்பாக்கத்தில் உள்ள தன் மகன் சந்தோஷ் வீட்டில் தங்கியிருந்தார். பின், நேற்று வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 70,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.
புகாரின் படி, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.