/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.750 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் 12 வார்டுகளுக்கு விமோசனம்
/
ரூ.750 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் 12 வார்டுகளுக்கு விமோசனம்
ரூ.750 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் 12 வார்டுகளுக்கு விமோசனம்
ரூ.750 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் 12 வார்டுகளுக்கு விமோசனம்
ADDED : ஏப் 15, 2025 11:51 PM

தாம்பரம்,
தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத, 12 வார்டுகளில், 750 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கப்பட உள்ளன.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் ஆகிய ஐந்து நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை ஆகிய ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
மாநராட்சியில் பல்லாவரம், குரோம்பேட்டை, மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில், ஏற்கனவே பாதாள சாக்கடை வசதி உள்ளது.
பம்மல் - அனகாபுத்துார் பகுதிகளில், 211.15 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை பணி, 2021ல் துவங்கி, 95 சதவீதம் முடிந்துள்ளது. ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
மாநகராட்சியின் 70 வார்டுகளில், 38 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதி உள்ளது; 11 வார்டுகளில் பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள, 21 வார்டுகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது.
இந்நிலையில், முதல்கட்டமாக செம்பாக்கம், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில், 12 வார்டுகளில், 750 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ட உள்ளது. நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில், இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏமாற்றம்
மாகராட்சியில் அடங்கிய பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளில், முறையான சாலை வசதி, குடிநீர், பாதாள சாக்கடை வசதி இல்லை. பாலாறு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தக் கோரி, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் போராடி வருகின்றனர்.
சட்டசபை மானிய கோரிக்கையில், தங்கள் பகுதிக்கான திட்டம் அறிவிக்கப்படாதது, மக்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மாங்காடில் ரூ.218 கோடி
பணிக்கு அரசு ஒப்புதல்
சென்னையை ஒட்டிய மாங்காடு நகராட்சி, அதிவேகமாக வளர்ந்து வருகிறது. புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மாங்காடு நகராட்சியில், 218 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்ட உள்ளது.
இந்த திட்டத்துடன் பரணிபுதுார், சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம், அய்யப்பன்தாங்கல், மவுலிவாக்கம், மலையம்பாக்கம் ஆகிய ஆறு ஊராட்சிகளையும் இணைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதற்கான திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
'ஜெர்மன் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும். இதன் வாயிலாக, 22,000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்கும்' என, நகராட்சி அதிகாரிகள் கூறினர்.