/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்தில் பயணியிடம் ரூ.75,000 திருட்டு
/
பேருந்தில் பயணியிடம் ரூ.75,000 திருட்டு
ADDED : ஏப் 27, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம்:மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி, 38. இவர், நேற்று முன்தினம் காலை காளஹஸ்தியில் உள்ள தாயை பார்க்க சென்றுள்ளார்.
பின், இரவு பேருந்தில் அங்கிருந்து மாதவரம் பேருந்து நிலையம் வந்து, கோயம்பேடிற்கு தடம் எண்: 21எம் என்ற பேருந்தில் பயணித்தார்.
பேருந்து சிறிது துாரம் சென்றதும், கையில் வைத்திருந்த பையும் அதனுள் வைத்திருந்த 75,000 ரூபாயும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.