/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
76 லட்சம் ரூபாய் மோசடி திருவள்ளூர் தம்பதிக்கு 'காப்பு'
/
76 லட்சம் ரூபாய் மோசடி திருவள்ளூர் தம்பதிக்கு 'காப்பு'
76 லட்சம் ரூபாய் மோசடி திருவள்ளூர் தம்பதிக்கு 'காப்பு'
76 லட்சம் ரூபாய் மோசடி திருவள்ளூர் தம்பதிக்கு 'காப்பு'
ADDED : நவ 06, 2024 12:58 AM

ஆவடி, உள்ளகரம், கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் பாலன், 57. திருமங்கலம், என்.வி.என்., நகரைச் சேர்ந்தவர் பாலு, 51. உறவினர்களான இருவரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
அவர்கள், போலி ஆவண மோசடி தொடர்பாக, கடந்த 24ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தனர்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
கடந்த 2017ல், ரியல் எஸ்டேட் செய்யும் காமேஸ்வர குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர், தன் மனைவி அருணா தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் வாயிலாக அயப்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்க, தலா 1.80 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் வீடு வாங்கி தருவதாக, அருணா கூறினார்.
அதன்படி, 2017ல், 41 பேரிடம் மொத்தம் 76.75 லட்சம் ரூபாய் வசூலித்து, காமேஸ்வரகுமார் மற்றும் அருணாவிடம் கொடுத்தோம். ஆனால் வீடு வாங்கி தராமல் ஏமாற்றினர். எனவே எங்களை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மாவட்டம், கோபாலபுரத்தைச் சேர்ந்த காமேஸ்வர குமார், 54, அருணா, 54, தம்பதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.