/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.11.50 லட்சம் 'ஹவாலா' தாம்பரத்தில் பறிமுதல்
/
ரூ.11.50 லட்சம் 'ஹவாலா' தாம்பரத்தில் பறிமுதல்
ADDED : பிப் 09, 2025 12:44 AM
தாம்பரம்,மேற்கு தாம்பரம், காந்தி சாலை சிக்னலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக, சுசுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். அவரது பேச்சில் முரண்பாடு தெரியவர, வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், 7.50 லட்சம் ரூபாய் சிக்கியது.
விசாரணையில், நெடுவாங்கரையைச் சேர்ந்த நைனா முகமது, 40, என்பதும், மணலியைச் சேர்ந்த ஒருவர் பணத்தை தந்து, தான் கூறும் இடத்திற்கு எடுத்து சென்று கொடுக்குமாறு தெரிவித்ததாகவும் கூறினார்.
அதில், சோமங்கலம் முகமது அப்துல் ரஹீம், 40, என்பவரிடம் 4 லட்சம் ரூபாயும், மீதி 7.50 லட்சம் ரூபாயை, அவர் கூறும் இடத்திற்கு எடுத்து சென்று கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பணம் கொடுத்த நபர் குறித்து எந்த விபரங்களையும் கூறவில்லை. இதனால், சந்தேமடைந்த போலீசார், நைனா முகமதுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
இதையடுத்து, சோமங்கலம் சென்ற போலீசார் முகமது அப்துல் ரஹீமை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார் என்பதும், தற்போது சென்னையில் வீடு கட்டுவதற்காக சவுதியில் உள்ள தன் நண்பரிடம் கடனாக பணம் கேட்டுள்ளதும் தெரிய வந்தது.
அதன்படி, நண்பர் கொடுத்து அனுப்பி இருக்கலாம் என, 4 லட்சம் ரூபாயை வாங்கியதாக கூறியுள்ளார். அவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.