நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கநல்லுார், நங்கநல்லுார், பாலாஜி நகரில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஆராதனா சபா இயங்கி வருகிறது. அதன் சார்பில், தியாகராஜரின் 40வது ஆண்டு விழா மற்றும், 177வது ஆராதனை விழா, நாளை முதல் இரண்டு நாட்கள் நங்கநல்லுார், பெருமாள் நகரில் நடத்தப்படுகிறது.
நாளை மாலை 5:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியை கிளைவ்லாண்டு ஆராதனா விழாவைச் சேர்ந்த சுந்தரம், கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். பின், சுதா ரகுநாதனின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதையடுத்து, சில வாரங்களுக்கு முன் நடந்த கர்நாடக இசைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் பரிசளித்து கவுரவிக்கப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை சபா குழுவினர் செய்து வருகின்றனர்.

