sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வண்டலுார் பூங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி; சாலையில் திரியும் மலைப்பாம்பால் பீதி

/

வண்டலுார் பூங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி; சாலையில் திரியும் மலைப்பாம்பால் பீதி

வண்டலுார் பூங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி; சாலையில் திரியும் மலைப்பாம்பால் பீதி

வண்டலுார் பூங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி; சாலையில் திரியும் மலைப்பாம்பால் பீதி

1


UPDATED : நவ 27, 2024 07:15 AM

ADDED : நவ 27, 2024 12:26 AM

Google News

UPDATED : நவ 27, 2024 07:15 AM ADDED : நவ 27, 2024 12:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்காவில், விலங்கு கூண்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடு சரிவர இல்லாததால், மலைப்பாம்பு ஒன்று பூங்கா வளாக சாலையில் திரிவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலுார் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான் என, 1,500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

இங்குள்ள விலங்குகளை பார்த்து ரசிக்க, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

புகழ்பெற்ற இப்பூங்காவில், சரியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், மலைப்பாம்பு ஒன்று பூங்கா உட்புற சாலையில் சுற்றித்திரிவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பூங்கா ஊழியர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது:

வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஊர் வன விலங்குகளுக்கு, சரியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

இதனால், 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று, இரவு நேரத்தில் பூங்கா உட்புற சாலையில் சுற்றித் திரிகிறது.

அதேபோல், 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து, நிலப்பரப்புக்கு வர முடியாமல், உப்பு நீர் முதலைகள் தவிக்கின்றன.

அப்படியே கஷ்டப்பட்டு நிலப்பரப்புக்கு வந்தால், முதலைகள் உடலில் சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும், பூங்கா நிர்வாகம் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை.

உட்புற சாலைகளில் சுற்றித்திரியும் மலைப்பாம்பால் ஏதாவது விபரீதம் ஏற்படும் முன், அதை பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும். இதையாவது, நிர்வாகம் செய்ய முன்வருமா என்பது கேள்விக்குறியே?

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நிரம்பிய குளம்

வண்டலுார் பூங்காவில், காட்டு மாடு கூண்டு பின்புறத்தில், சமீபத்தில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. சில நாட்களாக பெய்து வரும் மழையில், இந்த குளம் நிரம்பி காணப்படுகிறது. பூங்காவில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், காட்டுப் பகுதியில் சுற்றித்திரியும் மான்களுக்கும் இந்த குளம் பயனுள்ளதாக இருக்கும்.








      Dinamalar
      Follow us