/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமத்துவ பொங்கல் விழா டி.ஜி.பி., பங்கேற்பு
/
சமத்துவ பொங்கல் விழா டி.ஜி.பி., பங்கேற்பு
ADDED : ஜன 17, 2024 12:42 AM

தாம்பரம் தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில், சேலையூரை அடுத்த பதுவஞ்சேரியில் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், மனைவியுடன் கலந்துகொண்டார்.
விழாவில், உரியடி, கோலம், கயிறு இழுத்தல், லெமன் இந்த ஸ்பூன், மியூசிக்கல் சேர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
அப்போது, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசுகையில், ''எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு பொங்கல் விழாவை, காவல்துறை சார்பில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு, அனைத்து பகுதிகளிலும் மகிழ்ச்சியோடு நடைபெற்றது. தமிழக காவல் துறையை பொருத்தவரை, காவலர் நலன் குறித்த மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. காவலர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் பணியை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.

