/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நான்கு ஆண்டுகளாக அதே பல்லவி சென்னையில் பருவ மழையை சமாளிக்க 1,436 மோட்டார் தயார்: அமைச்சர் நேரு
/
நான்கு ஆண்டுகளாக அதே பல்லவி சென்னையில் பருவ மழையை சமாளிக்க 1,436 மோட்டார் தயார்: அமைச்சர் நேரு
நான்கு ஆண்டுகளாக அதே பல்லவி சென்னையில் பருவ மழையை சமாளிக்க 1,436 மோட்டார் தயார்: அமைச்சர் நேரு
நான்கு ஆண்டுகளாக அதே பல்லவி சென்னையில் பருவ மழையை சமாளிக்க 1,436 மோட்டார் தயார்: அமைச்சர் நேரு
ADDED : அக் 16, 2025 12:41 AM

சென்னை: ''சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 1,436 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன,'' என, நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார். பின், அமைச்சர் நேரு, மேயர் பிரியா ஆகியோர் கூறியதாவது:
சென்னையில் நேற்று காலை வரை, 3.8 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, எண்ணுாரில், 13.6 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில், நீரை வெளியேற்றும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தேவைக்கு ஏற்ப மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு, நிவாரண மையங்களுக்கு அழைத்து செல்ல, மாநகராட்சிக்கு சொந்தமாக, 36 படகுகள் உட்பட, 136 படகுகள் தயார் நிலையில் உள்ளன.
மாநகராட்சியில் மழைநீரை வெளியேற்ற, 100 ஹெச்.பி., திறன் உடைய, 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் பொருத்தப்பட்ட, 500 மோட்டார் பம்புகள் உட்பட பல்வேறு திறனில், 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
வடிகால்வாய் பணிக்காக துார்வாரும் வாகனங்கள் உட்பட, 478 வாகனங்கள், 489 மர அறுவை இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் நான்கு ஆண்டுகளில், 1,217 கி.மீ., நீள மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை, 1,136 கி.மீ., மழைநீர் வடிகால்வாய்களில், 1.06 லட்சம் வண்டல் வடிகட்டி தொட்டிகளும் துார்வாரப்பட்டுள்ளன.
மாநகராட்சி சார்பில், 193 இடங்களில் நிவாரண மையங்களும், 150 மைய சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.
மழைக்கால பணிகளில் அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் உட்பட, 22,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.