/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெங்கடேச பெருமாளுக்கு நாளை சம்ப்ரோக்ஷணம்
/
வெங்கடேச பெருமாளுக்கு நாளை சம்ப்ரோக்ஷணம்
ADDED : ஜன 20, 2024 11:55 PM
சென்னை, சென்னை, கோட்டூர், பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது, அலர்மேல்மங்கை தாயார் உடனுறை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பிரசன்ன வெங்கடேஷ்வரர், அமர்மேல் மங்கை தாயார், ஆண்டாள், சுதர்சன நரசிம்மர், வேணுகோபாலன், கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் துவதஸ்தம்பம் எனும் கொடிமரம், மடப்பள்ளி, மதில் சுவர் புனரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் நாளை நடக்கிறது.
இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. நேற்று மாலை முதல் யாக சாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன.
இன்று காலை 7:00 மணி முதல் திருவாரதனம், அக்னிபாராயணம், இரண்டாம் கால ஹோமம், பூர்ணாஹுதி, சாற்று மறை நடக்கிறது.
சம்ப்ரோக்ஷண நாளான நாளை அதிகாலை 5:00 மணி முதல் விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, கும்பாராதனம், நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு மகாபூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடப்புறப்பாடு நடக்கிறது.
காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் ஆலய விமான துவஜஸ்தம்ப ஜீர்ணோதாரண அஷ்டபந்த மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது.

