/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு 'சம்ஸ்கார் பாரதி' பாராட்டு விழா
/
நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு 'சம்ஸ்கார் பாரதி' பாராட்டு விழா
நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு 'சம்ஸ்கார் பாரதி' பாராட்டு விழா
நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு 'சம்ஸ்கார் பாரதி' பாராட்டு விழா
ADDED : செப் 09, 2025 01:21 AM

சென்னை, தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு, 'சம்ஸ்கார் பாரதி' அமைப்பு சார்பில், பாராட்டு விழா நடந்தது.
'சம்ஸ்கார் பாரதி' சார்பில் சென்னை, தி.நகரில் சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த தின விழா நேற்று முன் தினம் நடந்தது. இதில், 'பார்க்கிங்' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு, சினிமா இயக்குனர் பி.வாசு விருது வழங்கி கவுரவித்தார்.
விழாவில் 'வித்யா பாரதி' மாநில அமைப்பாளர் சுந்தர் பேசியதாவது:
'சம்ஸ்கார் பாரதி' நாடு தழுவிய பெரிய கலை அமைப்பு. விலங்குகளிடமிருந்து, மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது கலைகள் தான். நமது நாட்டிலேயே அத்தகைய கலைகள் தோன்றி வளர்ந்து, மனிதனை உயர்த்தியுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தன்மை வாய்ந்த கலைகள் இருக்கின்றன. நம் கலைஞர்கள், கலை வாயிலாக கிடைத்த செல்வங்களை மீண்டும் கலைக்காகவே வழங்கினர். இப்படியான தியாக உணர்வை அவர்களுக்கு கலை வழங்கியது.
பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தாலும், இசை என்பது மனிதனின் நிலையை உயர்த்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். இசை நம் மனதில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். பாடத்திட்டத்தில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சம்ஸ்கார் பாரதி மாநிலத் தலைவர் தாட்சாயினி ராமச்சந்திரன், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் துறவி சுவாமி யதுநாதனந்த மகராஜ், கவுரவத் தலைவர் நாராயண பட் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.