sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'சங்கீத மும்மூர்த்திகள்' நாடகம் 'டிவி' வரதராஜன் குழு அசத்தல்

/

 'சங்கீத மும்மூர்த்திகள்' நாடகம் 'டிவி' வரதராஜன் குழு அசத்தல்

 'சங்கீத மும்மூர்த்திகள்' நாடகம் 'டிவி' வரதராஜன் குழு அசத்தல்

 'சங்கீத மும்மூர்த்திகள்' நாடகம் 'டிவி' வரதராஜன் குழு அசத்தல்

2


ADDED : பிப் 10, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:12 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'டிவி' வரதராஜன் இயக்கி, நடித்த 'சங்கீத மும்மூர்த்திகள்' நாட்டிய நாடகம், தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நேற்று முன்தினம் நடந்தது.

ஷ்யாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர், சங்கீத மும்மூர்த்திகளாக போற்றப்படுகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை, ஒற்றுமை, திறமை மற்றும் பக்தியை, மேடையில் பிரதிபலிக்கும் விதமாக, சங்கீத மும்மூர்த்திகள் நாடகம் இயற்றப்பட்டது.

இதில், ஷ்யாமா சாஸ்திரியாக வரதராஜன், கலாக்ஷேத்ராவை சேர்ந்த பாலகுருநாதன் தியாகராஜராகவும், கொல்கட்டா ரமேஷ் என்பவர் தீட்சிதராகவும் நடித்தனர்.

மூவரும், மும்மூர்த்திகளாகவே நாடகத்தில் வாழ்ந்துள்ளனர். இவர்கள் இடம்பெறும் காட்சிகள், ரசிகர்களின் மனதை பூரிப்பில் ஆழ்த்தின.

'டிவி' வரதராஜனின் நாடகங்களுள் இதுவரை இல்லாத வகையில், சங்கீத உலகின் சிகரமாக போற்றப்படும் மும்மூர்த்திகளின் வாழ்க்கை கதை, இசை, பாடல், நடனம் என அனைத்தையும் இடம்பெறச் செய்து, ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் ருசியான விருந்து படைத்துள்ளார்.

இதில், 25க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் செம்மையாக செதுக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ, இசையமைத்து அசரடித்துள்ளார். அவரது இசையில் வரும் பாடல்கள் 'நெஞ்சில் நின்றவையாக' நிலைக்கின்றன.

பாடல்களை, பாடகர்கள் விஜய் சிவா, அம்ரித் ராம்நாத், ஸ்ரீராம் பரசுராம், சிக்கல் குருசரண், ராம கிருஷ்ணன் மூர்த்தி, பாரத் சுந்தர், சந்தீப் நாராயண் ஆகியோர் பாடினர்.

ரசிக பெருமக்களின் ஆரவாரமான கைத்தட்டல்களும், கடைசி நிமிடம் வரை கண்கொட்டாமல் கண்டு ரசித்த காட்சியும், நாடக உலகில் தனி இடத்தை பிடித்துள்ளது.






      Dinamalar
      Follow us