sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 8 மாதமாக இருளில் அம்பத்துார் பஸ் நிலையம் 'பியூஸ் கேரியர்' பிடுங்கப்பட்டது ஏன்?

/

 8 மாதமாக இருளில் அம்பத்துார் பஸ் நிலையம் 'பியூஸ் கேரியர்' பிடுங்கப்பட்டது ஏன்?

 8 மாதமாக இருளில் அம்பத்துார் பஸ் நிலையம் 'பியூஸ் கேரியர்' பிடுங்கப்பட்டது ஏன்?

 8 மாதமாக இருளில் அம்பத்துார் பஸ் நிலையம் 'பியூஸ் கேரியர்' பிடுங்கப்பட்டது ஏன்?


ADDED : பிப் 10, 2026 06:13 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு எட்டு மாதங்களுக்கும் மேலாகிறது. பிற இடங்களில், பிரமாண்ட நவீன பேருந்து நிலையங்கள் கட்டும் அரசு, இந்த பேருந்து நிலையத்தை கண்டுகொள்ளாதது ஏன் என, பயணியர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

இந்த மார்க்கமாக, தினமும் 50,000க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.நிலையத்தில் பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன.

பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுவதால், மாலை வேளையில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள், சர்வசாதாரணமாக நடக்கின்றன.

இதனால், பெண்கள் மற்றும் முதியோர், பேருந்து நிலையத்தை தவிர்த்து, சி.டி.எச்., சாலையில் கால்கடுக்க நின்று, பேருந்தில் ஏறிச் செல்கின்றனர்.

இப்பிரச்னை பெரியளவில் உருவெடுத்த பின், 2024ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, ஒன்பது லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் துவங்கி நடந்தன.

நிலையத்தின் ஒரு பகுதியில் புதிதாக கூரை, 12 மின் விசிறிகள், 15க்கும் மேற்பட்ட எல்.இ.டி., மற்றும் டியுப் லைட் உள்ளிட்டவை, பொதுப்பணித்துறையால் பொருத்தப்பட்டன.

கடந்தாண்டு ஜூலை மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், மேம்பாட்டு பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித் துறை நிர்வாகமே, மறுநாளே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, பேருந்து நிலைய சீரமைப்பு பணிக்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒன்பது லட்சம் ரூபாய், பொதுப்பணித் துறை வசம் சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. மின் இணைப்பு வழங்கப்படாததால், மின் விசிறி, விளக்குகள் செயல்படாமல் வீணாகி வருகின்றன.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணியர், அம்பத்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், போக்குவரத்து கழகம் மற்றும் பொதுப்பணித் துறையினரிடம் மனு வழங்கினர். ஆனால், எட்டு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இதனால், சமூக விரோத செயல் அரங்கேறும் கூடாரமாக பேருந்து நிலையம் மாறியுள்ளதாக, பயணியர் தெரிவிக்கின்றனர்.

அப்படியா சேதி இந்த நிலையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேதாச்சலம் என்பவரால், 10 ஆண்டுகளுக்கு முன் அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.

அ.தி.மு.க., காலத்தில் புத்துயிர் பெற்ற இந்நிலையத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க., ஓரங்கட்டுவதாகவும், பிற இடங்களில், பிரமாண்ட நவீன பேருந்து நிலையங்கள் கட்டும் அரசு, இந்த பேருந்து நிலையத்தை கண்டுகொள்ளாதது ஏன் என, பயணியர் கேள்வி எழுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us