/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றி அருகே குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
மின்மாற்றி அருகே குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
மின்மாற்றி அருகே குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
மின்மாற்றி அருகே குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 21, 2024 03:17 AM

அமைந்தகரை,:பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அமைந்தகரை பேருந்து நிறுத்தம் அருகில், மின்மாற்றியில் அத்துமீறி கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கீழ்ப்பாக்கத்தை நோக்கி செல்லும் சாலையில், அமைந்தகரை பேருந்து நிறுத்தம் உள்ளது.
இதன் அருகில் உள்ள சாலையோர மின்மாற்றியில், அப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து, குப்பையை அத்துமீறி வீசிவிட்டுச் செல்கின்றனர்.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, மின்மாற்றி அருகில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.