/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர் டிராக்டர் ஏறி பலி
/
துாய்மை பணியாளர் டிராக்டர் ஏறி பலி
ADDED : ஜூலை 23, 2025 12:23 AM

திருப்போரூர், டிராக்டர் ஏறி இறங்கியதில் துாய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்போரூர் பேரூராட்சி துாய்மை பணியாளர் எட்டி, 58. இவர், வழக்கம்போல நேற்று காலை, குப்பை சேகரிக்க, ஓ.எம்.ஆர்., சாலை காலவாக்கம் பகுதியில், டிராக்டரில் ஓட்டுநர் அருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில், டிராக்டரின் பின் சக்கரம் எட்டி மீது ஏறி இறங்கியதில், படுகாயமடைந்தார். சக துாய்மை பணியாளர்கள் அவரை, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்த துாய்மை பணியாளர் எட்டியின் உறவினர்கள், டிராக்டர் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி, திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, ஓட்டுநர் ஜெகதீசன் என்பவரை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். இதனால், ஓ.எம்.ஆர்., சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.