/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியில் கூடாரம் அமைத்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
/
மாநகராட்சியில் கூடாரம் அமைத்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
மாநகராட்சியில் கூடாரம் அமைத்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
மாநகராட்சியில் கூடாரம் அமைத்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஆக 05, 2025 12:11 AM

சென்னை, குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் கூடாரம் அமைத்து, துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர் மண்டலங்களில், 1,500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது, ராயபுரம், திரு.வி.க.,நகர் மண்டலங்களில் துாய்மை பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்துார் மண்டலத்தின் சில பகுதிகளிலும் துாய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம், உழைப்போர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி, 500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் கூடாரம் அமைத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் ஐந்தாவது நாளாகவும் நீடித்து வருகிறது.