/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி
/
முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி
முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி
முதல்வருக்கு நன்றி தெரிவித்து துாய்மை பணியாளர் பேரணி
ADDED : ஆக 16, 2025 12:27 AM
சென்னை, முதல்வருக்கு நன்றி தெரிவித்து, துாய்மைப் பணியாளர்கள் பெரம்பூரில் பேரணியாக சென்றனர்.
துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, துாய்மை பணியாளர்கள், 1,000த்திற்கும் மேற்பட்டோர், 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 13ம் தேதி நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், துாய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண நிதி, சுயதொழில் உதவி, காலை உணவு உள்ளிட்ட ஆறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று, பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோருடன், 'நன்றி சொல்வோம்… நன்றி சொல்வோம்…' என, கோஷமிட்டபடி, திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து துாய்மை பணியாளர்களுக்கு, அமைச்சரும், மேயரும் காலை உணவு பரிமாறினர்.