/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்துவட்டி கொடுமையில் சிக்கி துாய்மை பணியாளர்கள் தவிப்பு போலீஸ் துணை கமிஷனரிடம் புகார்
/
கந்துவட்டி கொடுமையில் சிக்கி துாய்மை பணியாளர்கள் தவிப்பு போலீஸ் துணை கமிஷனரிடம் புகார்
கந்துவட்டி கொடுமையில் சிக்கி துாய்மை பணியாளர்கள் தவிப்பு போலீஸ் துணை கமிஷனரிடம் புகார்
கந்துவட்டி கொடுமையில் சிக்கி துாய்மை பணியாளர்கள் தவிப்பு போலீஸ் துணை கமிஷனரிடம் புகார்
ADDED : ஜன 13, 2025 02:06 AM
வண்ணாரப்பேட்டை:கந்துவட்டிக்காரரிடம் சிக்கி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தவிப்பதாக மாநகராட்சி துாய்மை பணியார்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனரிடம், துாய்மை பணியாளர்கள் கொண்டய்யா, ராமய்யா நேற்று முன்தினம் அளித்த புகார் மனு:
கொருக்குப்பேட்டை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கொண்டய்யா, 58, அளித்துள்ள புகாரில், தண்டையார்பேட்டை மண்டலம் 34வது வார்டு துாய்மை பணியாளராக பணிபுரிகிறேன்.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கே.முருகனிடம், 2022 ஏப்ரல் மாதம், பல தவணைகளில், 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.
அன்று முதல், என் வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவற்றை முருகன் வைத்துள்ளார். இதுவரை சம்பள பணம், 8 லட்ச ரூபாய் மற்றும் கடந்த 2023 டிச., 19ம் தேதி வந்த பி.எப்., பணம் 3 லட்ச ரூபாயையும் எடுத்துள்ளார்.
அந்த வகையில் 11 லட்ச ரூபாய் எடுத்துள்ள நிலையில், இன்னும் 14 லட்ச ரூபாய் தர வேண்டுமென, என்னிடமும், என் குடும்பத்தினரிடமும் மிரட்டி கையெழுத்து பெற்று, கடன் பத்திரத்தை பதிவு செய்துள்ளார்.
இவரது பிடியில் சிக்கி, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக என் சம்பள பணத்தை முழுமையாக இழந்து வருகிறேன்.
குப்பையில் கிடக்கும் பொருட்களை கடையில் போட்டு என் குடும்பத்தை நடத்தி வருகிறேன். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மிரட்டி வரும் கந்து வட்டிக்காரர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், தண்டையார்பேட்டை மண்டலம், 34வது வார்டு துாய்மை பணியாளரான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமய்யா, 55, அளித்துள்ள புகாரில், 'முருகனிடம், கடந்த 2023ம் ஆண்டு, ஜூன் மாதம், 1.20 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கினேன்.
'எனது வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம், ஏ.டி.எம்., மூலம், இதுவரை 60,000 ரூபாய் கொடுத்துள்ள நிலையில், 4.60 லட்சம் ரூபாய் தர வேண்டுமென மிரட்டுகிறார். பணத்தை தரவில்லையெனில், ரவுடிகளிடம் பணம் கொடுத்து, உங்கள் குடும்பத்தையே ஒழித்து விடுவேன்' எனவும் மிரட்டினார்.
இதேபோல, 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களிடம் கந்து வட்டிக்கு பணம் தந்து வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.