ADDED : டிச 27, 2024 09:10 PM
சென்னை:மத்திய அரசின், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், கிராமப்புற கைவினைஞர்கள், கலைஞர்கள் தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் வகையில், பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து, 'சரஸ்' விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 'சரஸ்' கண்காட்சி துவங்கியது. துணை முதல்வர் உதயநிதி, துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சி வரும் 9ம் தேதி வரை நடக்க உள்ளது. கண்காட்சியில் ஆந்திரா, பீஹார், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த, மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த பொருட்களுடன், 120 கடைகளில் பொருட்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
ஆந்திராவின் அழகிய மரச்சிற்பங்கள், தெலுங்கானாவின் கலம்காரி பைகள், கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

