/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4.81 கோடியில் கட்டிய பள்ளி கட்டடம் திறப்பு
/
ரூ.4.81 கோடியில் கட்டிய பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : மே 30, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம் :கோடம்பாக்கம் மண்டலம், 132வது வார்டு ரங்கராஜபுரம் பிரதான சாலையில், ஒரே வளாகத்தில் சென்னை மாநகராட்சி துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இதில் துவக்கப்பள்ளி கட்டடம், மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, அந்த கட்டடத்தை இடித்து 4.81 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடிகளில் 20 வகுப்பறைகளுடன் புதிதாக கட்டடம் கட்டப்பட்டது.
அதேபோல், பள்ளியில் இருந்த பழைய சுற்றுச்சுவரை இடித்து 9.8 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டது.
இந்த பள்ளி கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.