/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி அளவில் கால்பந்து 21 அணிகள் பலப்பரீட்சை
/
பள்ளி அளவில் கால்பந்து 21 அணிகள் பலப்பரீட்சை
ADDED : ஏப் 17, 2025 11:38 PM

சென்னை,
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், 21 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனுாரில் நேற்று துவங்கின.
சி.பி.எஸ்.இ., - இ.சி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த, 17 வயதுக்கு உட்பட்ட 21 அணிகள் உற்சாகமாக பங்கேற்றள்ளன.
போட்டியை, மாமல்லபுரம் டி.எஸ்.பி., அறிவழகன், தமிழக கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் எட்வின் தாமஸ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
ராமாபுரம் ஸ்ரீ சைதன்யா பள்ளி பள்ளி, 7 - 0 என்ற கணக்கில், போரூர் வேலம்மாள் போதி கேம்பஸ் அணியை தோற்டித்தது. மற்றொரு போட்டியில், சிறுசேரி பி.எஸ்.பி.பி., அணி, 3 - 0 என்ற கணக்கில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பப்ளிக் பள்ளியையும், பென்னேரி வேலம்மாள் பள்ளி, 3 - 0 என்ற கணக்கில், 3 - 0 வண்டலுார் கிரசன்ட் பள்ளியை வீழ்த்தின. போட்டிகள் தொடர்கின்றன.

