/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி திறப்பு?
/
வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி திறப்பு?
ADDED : நவ 04, 2024 04:25 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
கடந்த 25ம் தேதி, திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால், பள்ளியில் இருந்த 45 மாணவியர் பாதிக்கப்பட்டனர்.
வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு, திருவொற்றியூரில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மாசு கட்டுபாட்டு வாரியம், பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி இன்று திறக்கப்படுவதாக, அதன் நிர்வாகம் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
விஷவாயு கசிவிற்கான காரணம் தெரியாமல், பள்ளியை எப்படி திறக்கலாம் என, பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.