பள்ளியில் தேங்கிய மழைநீரால் மாணவ – மாணவியர் பாதிப்பு
பள்ளியில் தேங்கிய மழைநீரால் மாணவ – மாணவியர் பாதிப்பு
ADDED : அக் 23, 2026 12:01 AM

மேடவாக்கம்:
மேடவாக்கம் பள்ளி யில் தேங்கிய மழை நீரால் பள்ளி மாணவ – மாணவியர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மேடவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம், மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையில் பள்ளி வளாகம் முழுதும் மழை நீர் தேங்கியது. தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி ‘டெங்கு’ உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ – மாணவியர் பாதிக்கப்பட்டனர்.
பெற்றோரின் புகாரை அடுத்து, தேங்கி மழைநீரை அகற்றும் பணியில் ஊராட்சியினர் ஈடுபட்டனர்.
மாணவ – மாணவியரின் நலனை கருத்தில் வைத்து, கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நிரந்தரமாக வடிகால் வசதியை ஏற்படுத்தவும் வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
