/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் விழா துவக்கம்
/
பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் விழா துவக்கம்
ADDED : மார் 27, 2025 12:06 AM
சென்னை, தமிழக உயர்கல்வித் துறையின் அறிவியல் நகரம் சார்பில், கோட்டூர்புரம், பிர்லா கோளரங்கத்தில், சென்னை அறிவியல் விழா, நேற்று துவங்கியது.
முக்கிய நிகழ்வாக, அறிவியல் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றன. இதில், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், கால்நடை அறிவியல் பல்கலை, இந்திய மருத்துவ இயக்குனரகம், புற்றுநோய் நிறுவனம் உள்ளிட்ட, 80 கல்வி நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன.
கல்லுாரி மாணவ - மாணவியரின் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பக் கருவிகள், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் தொடர்பான விளக்கப் படங்கள், ஆயுர்வேதம், யுனானி, சித்தா, அலோபதி சிகிச்சை முறைகள், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அறிவியல் சார்ந்த படிப்புகள் என்னென்ன உள்ளன என, இந்த கண்காட்சியில் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், அறிவியல் செய்முறை விளக்கங்கள், அறிவியல் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இவை, பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன.
இந்த அறிவியல் கண்காட்சி, வரும் 28ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.